மேற்கு தொடர்ச்சி மலையடிவார வனப்பகுதியில் தொடரும் மான்வேட்டை …
புலிகள் காப்பக மலைப்பகுதியாக தேவதானத்தில் இருந்து ராஜபாளையம், ஸ்ரீவில்லி புத்துார், வத்திராயிருப்பு, சாப்டூர் வரை நீடிக்கிறது. இந்த மலைப் பகுதியில் புலிகள் கரடி, யானைகள்,சாம்பல் நிற அணில்கள் பல்வேறு வகை வண்ணத்துப்பூச்சிகள் உட்பட ஏராளமான வன உயிரினங்கள் உள்ளது.
புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் தலைமையில் நான்கு வனச்சரகர்கள் மற்றும் வனக்காப்பாளர்கள் வேட்டை தடுப்பு காவலர்கள் இவற்றைக் காக்கும் பொருட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலையில் 24 மணி நேர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.
சமூக விரோத கும்பல்கள் வனப்பகுதிக்குள் புகுந்து மான் வேட்டையில்தொடர்ந்து , செயல்பட்டு வருகிறது. இதனை வனத்துறையினர் கண்டறிந்து வழக்குகள் பதிவு செய்தாலும், குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள்கைது செய்யப்பட்டாலும், நீதிமன்ற ஜாமின் பெற்று மீண்டும் வனவிலங்குவேட்டையில் ஈடுபடுகின்றனர். இதனால் இப் பகுதியில் வனவிலங்குகள் வேட்டைஎன்பது தொடர்கிறது.
கூடுதல் வேட்டை தடுப்பு காவலர்கள் நியமித்தும், மலையடி வாரத்தில் போலீஸ் செக் போஸ்ட் அமைத்தும், விவசாயிகள் அல்லாத தனி நபர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதிக்கு வருவதை தடுக்கவும், வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply